உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருப்பரங்குன்றத்தில் முருகப்பெருமானுக்கு சாந்தாபிஷேகம்; கந்த சஷ்டி விழா நிறைவு

திருப்பரங்குன்றத்தில் முருகப்பெருமானுக்கு சாந்தாபிஷேகம்; கந்த சஷ்டி விழா நிறைவு

திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் கோயிலில் கந்த சஷ்டி விழா உச்ச நிகழ்ச்சியாக சுப்பிரமணிய சுவாமி, தெய்வானைக்கு சாந்தாபிஷேகம் நடந்தது. 


உற்ஸவர் சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை திருவாட்சி மண்டபத்தில் எழுந்தருளினர். சுவாமி முன்பு தங்கம், வெள்ளி குடங்களில் புனித நீர் நிரப்பி பூஜை நடந்தது. பஞ்ச கவ்யம், 108 லிட்டர் பால், 108 இளநீர், கரும்பு சாறு, எலுமிச்சம் பழச்சாறு உள்ளிட்ட பல்வகை திரவிய அபிஷேகங்கள் முடிந்து சுப்பிரமணிய சுவாமிக்கு தங்க குடம், தெய்வானைக்கு வெள்ளி குடங்களிலிருந்த புனித நீர் அபிஷேகம் முடிந்து புஷ்பா அலங்காரமாகி, தீபாராதனை முடிந்து அஸ்தான மண்டபத்தை வலம்வந்து அருள்பாலித்தனர். 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !