செம்மங்குடி கோவிலில் மஹாமேரு மகோற்சவம்
ADDED :2049 days ago
திருவாரூர் : குடவாசல் அருகே, செம்மங்குடி கோவிலில் நேற்று, மஹாமேருக்கு, 22வது ஆண்டாக, சம்வத்சராபிஷேக மகோற்சவம் நடந்தது.
திருவாரூர் மாவட்டம், குடவாசல் அருகே, செம்மங்குடி ஆனந்தவல்லி சமேத அகஸ்தீஸ்வரர் கோவிலில், 22 ஆண்டுகளாக, ஆனந்தவல்லி மஹாமேரு சம்வத்சராபிஷேக மகோற்சவம் நடந்து வருகிறது. நடப்பாண்டு பூஜை, நேற்று முன்தினம் மாலை, 4:00 மணிக்கு துவங்கியது.நேற்று காலை, 7:30 மணிக்கு இரண்டாம் கால யாகசாலை பூஜை; 9:00 மணிக்கு ஆனந்தவல்லி மற்றும் மஹாமேருக்கு மகா அபிஷேகம்; 10:00 மணிக்கு கலச அபிஷேகம், தீபாராதனை நடந்தது.இன்று காலை, 8:00 மணிக்கு, திருகல்யாண உற்சவம்; 11:30 மணிக்கு, திருகல்யாண கோலத்தில் சுவாமி வீதிவுலா நடக்கிறது. ஏற்பாடுகளை, ஆனந்தவல்லி கைங்கர்ய சபாவினர் மற்றும் செம்மங்குடி நற்பணி மன்றத்தினர் செய்திருந்தனர்.