உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ராஜகாளியம்மன் கோவிலில் திருக்கல்யாணம்

ராஜகாளியம்மன் கோவிலில் திருக்கல்யாணம்

உடுமலை: உடுமலை, சிவசக்தி காலனி ராஜகாளியம்மன் கோவில் திருவிழா, கடந்த மாதம் 25ம் தேதி நோன்பு சாட்டுதலுடன் துவங்கியது. தொடர்ந்து நாள்தோறும் அம்பாளுக்கு சிறப்பு அபிேஷகத்துடன் அலங்கார பூஜையும் நடந்தது.

கடந்த 3ம்தேதி மாலையில், பூக்கம்பம் எடுத்துவரப்பட்டு, கோவிலில் நடப்பட்டது.வண்ண மலர் மற்றும் மஞ்சள் பூசி அலங்கரிக்கப்பட்டிருந்த கம்பத்துக்கு, பக்தர்கள் நாள்தோறும் மஞ்சள் நீர் ஊற்றி வழிபட்டனர். சுற்றுப்பகுதியிலுள்ள பக்தர்கள் நாள்தோறும் சிறப்பு பூஜைகளில் பங்கேற்றனர்.மங்கல பொருட்கள் வழங்கி, வேண்டுதல்களை நிறைவேற்றினர். தொடர்ந்து, 8ம் தேதி, இரவு, 12:00 மணிக்கு முனி விரட்டுதல் நிகழ்ச்சி நடந்தது. கடந்த 9ம் தேதி காலையில், பக்தர்கள், திருமூர்த்திமலையிலிருந்து தீர்த்தம் எடுத்து வந்தனர். மாலையில், மாரியம்மன் கோவிலிலிருந்து, ராஜகாளியம்மன் கோவிலுக்கு தீர்த்தம் கொண்டு வந்தனர். திருவிழாவையொட்டி, தேவராட்டம் நிகழ்ச்சி நடந்தது.

பக்தர்கள் அழகு குத்தி வழிபாடு நடத்தினர். நேற்றுமுன்தினம் மாலையில், பக்தர்கள் திரளாக, மாவிளக்கு மற்றும் பூவோடு எடுத்து வந்தனர். அம்பாளுக்கு மாவிளக்கு பூஜை நடந்தது. நேற்று, காலை, அம்பாள் திருக்கல்யாண உற்சவம் துவங்கியது. மலர், மங்கல பொருட்கள், நாவல்பழம் மாலை அணிவித்து சிறப்பு அலங்காரத்துடன் திருக்கல்யாண சடங்குகள் துவங்கியது. வேத மந்திரங்கள் முழங்க திருக்கல்யாண உற்சவம் நடந்தது. பக்தர்கள் திரளாக பங்கேற்று வழிபட்டனர். திருமண கோலத்தில், அம்மன் ஊஞ்சல் உற்சவம் நடந்தது. மங்கல பொருட்கள் பிரசாதமாக வழங்கப்பட்டது. பக்தர்களுக்கு அன்னதானம் நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !