உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / காரைக்கால் நித்யகல்யாண பெருமாள் கோவிலில் தெப்பத் திருவிழா

காரைக்கால் நித்யகல்யாண பெருமாள் கோவிலில் தெப்பத் திருவிழா

காரைக்கால்:  காரைக்கால் : காரைக்கால் நித்யகல்யாண பெருமாள் கோவிலில் நடந்த தெப்பத் திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

காரைக்கால் பாரதியார் சாலையில் உள்ள நித்திய கல்யாண பெருமாள் கோவில் பிரம்மோற்சவ விழா கடந்த 28ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. பிரம்மோற்சவ காலங்களில் தினந்தோறும் காலை மற்றும் மாலை சிறப்பு அபிஷேக ஆராதனைகள் சிறப்பு அலங்காரத்தில் பெருமாள் திருவீதி உலா நடைபெறும். விழாவின் முக்கிய நிகழ்ச்சியான நேற்று தெப்பத் திருவிழா முன்னிட்டு விசேஷ திருமஞ்சனம். தெப்ப புண்யாஹ வாசனம் நடந்தது. இரவு ஸ்ரீதேவி சமேதராக பெருமாள் தெப்பத்தில் எழுந்தருளினார். அம்மையார் திருக்குளத்தில் சந்திர புஷ்கரணியில் தெப்பம் மின் அலங்காரத்தில் அலங்கரிக்கப்பட்ட பெருமாள் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். இந்நிகழ்ச்சியில் அசனா எம்.எல்.ஏ. அறங்காவலர் குழுத்தலைவர் கேசவன். செயலாளர் பக்கிரிசாமி. துணைத் தலைவர் ஆறுமுகம். பொருளாளர் ரஞ்சன் உள்ளிட்ட நித்யகல்யாணப் பெருமாள் பக்தஜன சபா ஆகியோர் சிறப்பாக செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !