கள்ளக்குறிச்சியில் பெண் தேவதை வழிபாடு
ADDED :2048 days ago
கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி டி.ஆர்.எஸ்., நகரில் காமாயி (காமட்டான்) பெண் தேவதை வழிபாடு நேற்று முன்தினம் இரவு நடந்தது.
அதனையொட்டி, விளாந்தாங்கல் சாலை விநாயகர் கோவிலியிருந்து களிமண்ணால் செய்த மூன்று பெண் தேவதைகளை தலையில் சுமந்து ஊர்வலமாக விழா மேடைக்கு எடுத்துச் சென்றனர்.பின்னர் அங்கு, 108 அகல்தீபம் ஏற்றப்பட்டது.தொடர்ந்து, மழை வேண்டியும், திருமண தடை நீங்கவும், குழந்தை பாக்கியம் வேண்டியும் வழிபாடு நடத்தப்பட்டது. திருநங்கை மயில் தலைமையிலான குழுவினர் பம்பை, உடுக்கையுடன் பாடல்களை பாடி கும்மியடித்தனர். நேற்று அதிகாலை பூஜை நடத்தி, பெண் தேவதைகளை ஊர்வலமாக கோமுகி நதிக்கரைக்கு கொண்டு சென்றனர்.அங்கு சிறப்பு பூஜை செய்தபின், களிமண்ணால் செய்யப்பட்டிருந்த தேவதைகளை ஆற்றில் கரைத்தனர்.