உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பழநிக்கு பக்தர் வருகை குறைந்தது

பழநிக்கு பக்தர் வருகை குறைந்தது

 பழநி,; கொரானோ வைரஸ் அச்சத்தால், பழநி மலைக்கோயிலுக்கு வெளியூர் பக்தர்கள் வருகை குறைந்தது. சாதாரணமாக விடுமுறை நாட்களில் பக்தர்கள் வருகை அதிகமிருக்கும். கேரளா போன்ற வெளிமாநிலங்களில் கொரோனா வைரஸ் தொற்று பீதியால் அங்கிருந்து வரும் பக்தர்கள் எண்ணிக்கை குறைந்துள்ளது.தற்போதைய சூழலில் பழநியில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், மருத்துவ வசதிகள் செய்து உள்ளனர். இருப்பினும் வெளிமாநில பக்தர்கள் வருகை அதிகளவில் இல்லை. கடைகளில் வியாபாரம் குறைந்துள்ளது. விடுதிகள், திரையரங்குகளில் கூட்டம்குறைவாக உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !