உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கோபாலகிருஷ்ணர் கோயில் மண்டல பூஜை விழா

கோபாலகிருஷ்ணர் கோயில் மண்டல பூஜை விழா

தேவிபட்டினம்: தேவிபட்டினம் அருகே அழகன்குளம் ஸ்ரீ ஆண்டாள் சமேத ஸ்ரீ சந்தான கோபால கிருஷ்ணர் கோயில் கும்பாபிஷேக விழா கடந்த மாதம் நடைபெற்றது. விழாவின் தொடர்ச்சியாக நேற்று கோயிலில் மண்டல பூஜை நடந்தது. முன்னதாக யாகசாலை பூஜைகள் செய்யப்பட்டு, மூலவர் மற்றும் பரிகார தெய்வங்களுக்கு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். விழாவில் நிர்வாகிகள் ஸ்ரீதரன், கிருஷ்ண தெய்வபிரகாசம், அசோகன், பிரகலாதன் உட்பட ஏராளமானேர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !