தீர்த்தமலையில் பக்தர்களுக்கு அனுமதி மறுப்பு
ADDED :2031 days ago
அரூர்: தீர்த்தமலை, தீர்த்தகிரீஸ்வரர் கோவிலுக்கு வரும், 31 வரை பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்வதற்கு அனுமதி இல்லை என, கோவில் நிர்வாகம் சார்பில், தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து செயல் அலுவலர் சரவணக்குமார் வெளியிட்டுள்ள அறிக்கை: கொரோனா வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்தும் நோக்கில், பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்வதற்கு தற்காலிகமாக, அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. ஆனால், கோவிலில் ஆகம விதிகளுக்கு உட்பட்டு, அனைத்து பூஜைகளும் நடக்கும். தீர்த்தமலை மலைக்கோவில் உட்பட, அனைத்து கோவில்களிலும் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய, 31 வரை அனுமதி இல்லை. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.