உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பிரம்மபுரீஸ்வரர் கோவிலுக்கு திருக்குடைகள் உபயம்

பிரம்மபுரீஸ்வரர் கோவிலுக்கு திருக்குடைகள் உபயம்

 உத்திரமேரூர் : பெருநகர் பிரம்மபுரீஸ்வரர் கோவிலுக்கு, அதிகார நந்தி சேவை உற்வசத்திற்காக, பிரமீசர் சிவ பூதகண திருக்கயிலாய வாத்தியக்குழுவினர், சுவாமி திருக்குடைகளை, உபயமாக வழங்கினர்.

உத்திரமேரூர் அடுத்த பெருநகரில், பட்டுவதனாம்பிகை உடனாகிய பிரம்மபுரீஸ்வரர் கோவில் உள்ளது.இக்கோவிலுக்கு, பிரம்மபுரீஸ்வரர் சிவ பூதகண திருக்கயிலாய வாத்தியக்குழு சார்பில், 3 லட்சம் ரூபாய் செலவில், அதிகார நந்தி வாகனம் செய்யப்பட்டு, கடந்த மாதம், 18ம் தேதி கரிக்கோலம் எனப்படும், வெள்ளோட்டம் நடந்தது.புதிய வாகனத்தின், முதலாம் ஆண்டு அதிகார நந்தி சேவை உற்சவ விழா வரும், தமிழ் புத்தாண்டு தினமான, ஏப்ரல், 14ல் நடைபெறுகிறது.  இதில், சுவாமி வீதியுலா செல்லும்போது, சுவாமிக்கு நிழல் தரும் வகையில், பிரம்மபுரீஸ்வரர் சிவ பூதகண திருக்கயிலாய வாத்தியக்குழு சார்பில், இரண்டு சுவாமி திருக்குடைகள், நேற்று முன்தினம், கோவில் நிர்வாகத்திடம் வழங்கப்பட்டது.முன்னதாக, இரு திருக்குடைகளும், பெருநகரில் முக்கிய வீதி வழியாக ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டன. பக்தர்கள், கற்பூர தீப ஆராதனை காண்பித்து வழிபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !