உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / காரைக்கால் திருலோக நாதர் சுவாமி கோயிலில் நந்தீஸ்வரருக்கு அபிஷேகம்

காரைக்கால் திருலோக நாதர் சுவாமி கோயிலில் நந்தீஸ்வரருக்கு அபிஷேகம்

காரைக்கால்:  காரைக்காலில் திருலோகநாத சுவாமி ஆலயத்தின் சனி பிரதோஷத்தை முன்னிட்டு நந்தீஸ்வரர் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. காரைக்கால் தக்களூர் பகுதியில் உள்ள பிரசித்தி பெற்ற ஸ்ரீ தர்மசம்வர்த்தினி சமேத ஸ்ரீ திருலோகநாதர் சுவாமி ஆலயத்தில் பங்குனிமாத தேய்பிறை சனிபிரதோஷ முன்னிட்டு நேற்று முன்தினம் கொடிமரம் அருகிலுள்ள நந்தீஸ்வரருக்கு சிறப்பு அபிஷேகம் ஆராதனை நடைபெற்றது.முன்னதாக மஞ்சள்.பால்.தயிர்.சந்தனம் உள்ளிட்ட திரவிய பொடி கொண்டு சிறப்பு அபிஷேகம் மற்றும் மகாதீபாராதனை நடைபெற்றது. பங்குனி மாத தேய்பிறை சனிபிரதோஷத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.



தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !