செல்வ விநாயகர் கோவில் கும்பாபிஷேகம் ஒத்திவைப்பு
ADDED :2104 days ago
கோவில்பாளையம்: தேவம்பாளையம், செல்வ விநாயகர் கோவில் கும்பாபிஷேகம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. கோவில்பாளையத்தை அடுத்து உள்ள தேவம்பாளையத்தில், 100 ஆண்டுகள் பழமையான செல்வ விநாயகர் கோவில் உள்ளது. பழமையான இந்த கோவிலில் கும்பாபிஷேகம் நடத்துவதற்காக பல்வேறு திருப்பணிகள் செய்யப்பட்டன. இதையடுத்து வருகிற, 26 ம் தேதி சிரவை ஆதீனம் மற்றும் பேரூராதீனம் தலைமையில், கும்பாபிஷேகம் நடத்த தீர்மானிக்கப்பட்டு பக்தர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. கொரோனா வைரஸ் பரவல் காரணமாக 26 ம் தேதி நடக்க இருந்த கும்பாபிஷேகம் ஒத்திவைக்கப்படுகிறது என, திருப்பணி கமிட்டியினர் அறிவித்துள்ளனர். புதிய தேதி பின்னர் அறிவிக்கப்படும், எனவும் தெரிவித்துள்ளனர்.