உத்தரகோசமங்கை கோயிலில் தரிசனத்திற்கு தடை
ADDED :2042 days ago
உத்தரகோசமங்கை : கொரோனா வைரஸ் தொற்று பரவாமல் தடுக்கும் வகையில் மார்ச் 20 முதல் கோயில்களில் பக்தர்களின் தரிசனம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. அனைத்து சன்னதிகளிலும் ஆகம விதிகளின் படி அபிஷேக, ஆராதனைகள், பூஜை முறைகள் வழக்கம் போல் நடக்கிறது. உத்தரகோசமங்கை மங்களநாதர் சமேத மங்களேஸ்வரி அம்மன் கோயிலில் மரகத, ஸ்படிக லிங்க உச்சிகால பூஜை உள்ளிட்ட ஆறு கால பூஜைகள் நிறைவேற்றப்பட்டு வருகிறது. கோயிலில் உள்ள பெரிய கதவுகள் அடைக்கப்பட்டு ஒரு ஆள் செல்லும் வகையில் உள்ள நுழைவு வாயிலில் மட்டுமே பூஜகர்கள் சென்று சுவாமிக்கு பூஜைகளை செய்து வருகின்றனர்.