பேரூர் படித்துறையில் பரிகாரம் செய்ய தடை
                              ADDED :2046 days ago 
                            
                          
                          
பேரூர்: பேரூர் நொய்யல் படித்துறையில், திதி காரியங்கள் செய்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
பேரூரில் பிரசித்தி பெற்ற பட்டீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. இங்குள்ள நொய்யல் படித்துறைக்கு திதி காரியங்களுக்காக தமிழகம் மட்டுமின்றி கேரளா, கர்நாடகா மாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் வருவர்.தற்போது, கொரோனா வைரஸ் உலகையே அச்சுறுத்தி வருகிறது. அதன், பரவலை தடுக்க கோவில்கள், பள்ளி, கல்லுாரி உள்ளிட்டவை மூடப்பட்டுள்ளன. இந்நிலையில், பேரூர் நொய்யல் படித்துறையில், திதி காரியங்கள் செய்வதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.வரும், 31ம் தேதி வரை,திதி காரியங்களுக்காக பொதுமக்கள் வர வேண்டாம் என, புரோகிதர் பிராமணர்கள் சங்கம் கேட்டுக் கொண்டுள்ளது.