வழிபாட்டு தலங்களில் கிருமிநாசினி: சிதம்பரம் நடராஜர் கோவிலில் துவக்கம்
சிதம்பரம்: சிதம்பரம் நகராட்சியில் பொது இடங்களை அடுத்து நேற்று வழிபாட்டு தளங்கள் சுத்தப்படுத்தும் பணி துவங்கியது. முதல் கட்டமாக சிதம்பரம் நடராஜர் கோவில் கிருமி நாசினி கரைசல் கொண்டு சுத்தப் படுத்தும் பணி துவங்கியது.
இந்தியாவில் கொரோனா வைரஸ் தாக்குதல் அதிகரித்து வரும் நிலையில், தமிழக அரசு அதனை தடுக்க பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடக்கை மேற்கொண்டு வருகிறது. மாவட்ட நிர்வாகம், அனைத்து நகராட்சிகள் தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ள உத்தரவிட்டுள்ளது. அதனையடுத்து சிதம்பரம் நகராட்சி ஆணையர் சுரேந்தர்ஷா உத்தரவின் பேரில் 50 ஆயிரம் லிட்டம் குளோரின் கரைசல் கரைக்கப்பட்டு துாய்மை படுத்தும் பணிதுவங்கியது.நேற்று முன்தினம் முழு அடைப்பின் போது, சிதம்பரம் பஸ் நிலையம், மார்க்கெட் பகுதி, பஸ் நிறுத்தம், ரயில் நிலையம், வணிக நிறுவனங்கள் சுத்தப்படுத்தப்பட்டது.தொடர்ந்து நேற்று வழிபாட்டு தளங்கள் சுத்தப்படுத்தும் பணி துவங்கியது. அதில் முதல் கட்டமாக சிதம்பரம் நடராஜர் கோவில் சுத்தப்படுத்தும் பணி நடந்தது.கோவில் வெளிப்பிரகாரம், கோபுரங்கள், உள் பிரகாரம், சபை உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் 2 லாரிகள் மூலம் கொண்டு வரப்பட்ட குளோரின் கரைசல் கொண்டு துாய்மை பணிகள் செய்யப்பட்டது. தொடர்ந்து நகரப்பகுதியில் உள்ள 7 மசூதிகள், 2 தேவாலயங்கள்சுத்தப்படுத்தும் பணி நடைபெறும் என ஆணையர் சுரேந்தர்ஷா தெரிவித்தார்.