சிவகங்கை மகாமாரியம்மன் கோயிலில் பங்குனி விழா கொடியேற்றத்துடன் துவக்கம்
சிவகங்கை: சிவகங்கை ஆயுதப்படை குடியிருப்பில் உள்ள மகாமாரியம்மன் கோயிலில் கொடியேற்றம், காப்பு கட்டு தலுடன் பங்குனி பொங்கல் விழா துவங்கியது.
சிவகங்கை அருகே ஆயுதப்படை குடியிருப்பில் உள்ள இக்கோயிலில் நேற்று காலை 9:00 மணி முதல் 10:25 மணிக்குள் கோயில் கொடிமரத்தில் கொடியேற்றம் மற்றும் அம்மனுக்கு காப்பு கட்டுதலுடன் பங்குனி விழா துவங்கியது. சிவகங்கை எஸ்.பி., சிவபிரசாத் தலைமை வகித்தார். எஸ்.பி., தனிப்பிரிவு இன்ஸ்பெக்டர் சாகுல் அமீது முன்னிலை வகித்தார். ஆயுதப்படை பிரிவு இன்ஸ்பெக்டர்கள் மாரியம்மாள், சிவா உட்பட ஆயுதப்படை பிரிவு போலீசார், அவர்களது குடும்பத்தினர் பங் கேற்றனர். கோயில் பூஜாரி சந்திரசேகர சுவாமி தலைமையில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. பங்குனி திருவிழாவை முன்னிட்டு தினமும் சுவாமிக்கு சிறப்பு அபிேஷக ஆராதனைகள் நடைபெறும். சிறப்பு அலங்காரத்தில் அம்மன் பக்தர்களுக்கு காட்சி அளிக்கிறார். மார்ச் 22 வரை நடக்கும் விழாவில் சிவகங்கை தெப்பக்குளத்தில் இருந்து கரகம் எடுத்து ஊர்வலமாக ஆயுதப்படை குடியிருப்பு மகாமாரியம்மன் கோயிலில் சிறப்பு அபிேஷகம் நடைபெறும். விழாக் குழுவினர் ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.