எல்லைப்பிடாரி அம்மன் கோவில் விழா கொரோனா வைரஸால் ரத்து
ADDED :2051 days ago
சேலம்: சேலம், எல்லைப்பிடாரி அம்மன் பங்குனி திருவிழா, கொரோனா வைரஸ் பரவலால், ரத்து செய்யப்பட்டுள்ளதாக, கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது. சேலம், எல்லைப்பிடாரி அம்மன் கோவில் பங்குனி திருவிழாவுக்கு கடந்த, 17 காலையில், முகூர்த்தக்கால் நடப்பட்டு, பணிகள் துவங்கின. இன்று இரவு, பூச்சாட்டுதலுடன் திருவிழா துவங்க இருந்தது. இந்நிலையில், கோவில் செயல் அலுவலர் குணசேகரன், தக்கார் ராசாராம், திருவிழா ஆலோசனை குழு தலைவர் மாதேஸ்வரன் ஆகியோர் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கை: கொரோனா வைரஸ் பரவலால், கோவில்களை மூடவும், பொதுமக்கள் கோவில்களுக்கு வரவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால், எல்லைப்பிடாரி அம்மன் கோவில் திருவிழாவுக்கு தடை விதிக்கப்படுகிறது. திருவிழா தேதி முடிவு செய்து, பின்னர் அறிவிக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.