திருப்புவனம் மாரியம்மன் பங்குனி திருவிழா நிறைவு
ADDED :2115 days ago
திருப்புவனம் : திருப்புவனம் மாரியம்மன் கோயில் பங்குனி திருவிழா நிறைவு பெற்றது.இக்கோயிலில் கடந்த 16ம் தேதி கொடியேற்றத்துடன் விழா தொடங்கியது. பத்து நாட்கள் நடந்த விழாவில் தினமும் பக்தர்கள் அக்னிசட்டி ஏந்தி நகரை வலம் வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர். மதியம் ஒரு மணியில் இருந்து போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டது. வெளியூர் பேருந்துகள் பைபாஸ் ரோட்டிலேயே திருப்பி விடப்பட்டன.