உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கொரோனா அச்சத்தால் வீட்டு வாயிலில் மஞ்சள் தெளிப்பு

கொரோனா அச்சத்தால் வீட்டு வாயிலில் மஞ்சள் தெளிப்பு

மாமல்லபுரம்:வீட்டு வாயிலில், சாணம் தெளிப்பதை கைவிட்ட நகர்ப் பகுதியினர், கொரோனா வைரஸ் அச்சத்தால், தற்போது, மஞ்சள் தெளிக்கின்றனர்.

தமிழர் பாரம்பரியத்தில், வீட்டு வாயிலில், சாணம் தெளித்து, கோலம் இடுவது குறிப்பிடத்தக்கது. கடந்த, 30 ஆண்டுகளுக்கு முன், கிராமம் மட்டுமின்றி, நகர்ப் பகுதி களிலும், இவ்வழக்கம் இருந்தது.நோய் கிருமிகள், வீட்டிற்குள் வருவதை தவிர்க்கவே, கிருமி நாசினியாக, சாணம் பயன்படுத்தப்பட்டது. நாளடைவில், நகர்ப் பகுதிகளில், சாண தெளிப்பை கைவிட்டனர்.தற்போது, கொரோனா வைரஸ் பரவி, மக்கள் அச்சப்படுகின்றனர். இதன் எதிரொலியாக, சாண தெளிப்பை கைவிட்டோர், மீண்டும் தொடர விரும்புகின்றனர். சாணம் கிடைக்காத சூழலில், மஞ்சள் தெளித்து கோலம் இடுகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !