உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / முத்துமாரியம்மன் பங்குனி பொங்கல் விழா நிறைவு

முத்துமாரியம்மன் பங்குனி பொங்கல் விழா நிறைவு

மானாமதுரை : மானாமதுரை தயாபுரம் முத்துமாரியம்மன் கோயில் பங்குனி பொங்கல் விழா அமைதியாக, மக்கள் கூட்டமில்லாமல் நடந்து முடிந்தது.

மானாமதுரை தயாபுரம் முத்துமாரியம்மன் கோயிலில் வடருந்தோறும் பங்குனி பொங்கல் விழா தொடர்ந்து 10 நாட்கள் நடைபெறும். மானாமதுரை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளிலிருந்து வரும் பக்தர்கள் தீச்சட்டி, ஆயிரங்கண்பானை,கரும்பு தொட்டில்,என வேண்டுதல்களை நிறைவேற்றி செல்வர். இந்தாண்டிற்கான விழா கடந்த 15 ந் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. முக்கிய நிகழ்ச்சியான நேற்று கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கோயிலுக்குள் குறைந்த அளவு பக்தர்களே அனுமதிக்கப்பட்டனர்.  பக்தர்கள் வைகை ஆற்றில் இருந்து தீச்சட்டி, பால்குடம், ஆயிரங்கண்பானை எடுத்து வந்து பூக்குழி இறங்கி வேண்டுதலை நிறைவேற்றினர். ஏற்பாடுகளை டிரஸ்டிகள் சுப்பிரமணியன், நாகராஜன், முருகன் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !