திருப்புவனம் புஷ்வனேஸ்வரர் பங்குனி திருவிழா ரத்து
ADDED :2071 days ago
திருப்புவனம் : திருப்புவனம் புஷ்வனேஸ்வரர் ஆலய பங்குனி திருவிழா நிறுத்தப்படுவதாக சிவகங்கை தேவஸ்தானம் அறிவித்துள்ளது. திருப்புவனத்தில் புஷ்பவனேஸ்வரர் சவுந்தரநாயகி அம்மன் கோயில் உள்ளது. ஆண்டு தோறும் பங்குனி திருவிழா நடைபெறுவது வழக்கம். இந்தாண்டு பங்குனி திருவிழா மார்ச் 27ம் தேதி தொடங்கி ஏப்ரல் 7ம் தேதி வரை நடைபெற இருந்தது. கொரோனா வைரஸ் பரவல் காரணமாக பங்குனி திருவிழா ரத்து செய்யப்படுவதாக சிவகங்கை தேவஸ்தானம் அறிவித்துள்ளது.