விநாயகர் கோவிலில் யுகாதி பண்டிகை ரத்து
ADDED :2078 days ago
திருப்பூர் : ஊரடங்கு உத்தரவு அமலில் இருப்பதால், கிராமங்களில் யுகாதி பண்டிகை கொண்டாட்டம் ரத்து செய்யப்பட்டது.
தெலுங்கு வருட பிறப்பு, யுகாதி என்ற பெயரில் தமிழகத்தில் கொண்டாடப்படுகிறது. கிராமங்கள் மற்றும் நகரத்தில் உள்ள, விநாயகர் கோவில்களில், சிறப்பு அபிேஷக பூஜைகள் நடப்பது வழக்கம். அவிநாசிலிங்கேஸ்வரர் கோவிலில் இருந்து தீர்த்தம் எடுத்துவந்து, விநாயகருக்கு அபிேஷகம் செய்யப்படும்.பஞ்சாமிர்தம் தயாரிக்கும் போது, வேப்பம்பூவை கலந்து, விநாயகருக்கு அபிேஷகம் நடப்பது வழக்கம். ஊரடங்கு உத்தரவு காரணமாக, கோவில்களில் பூஜைகள் மட்டும் நடந்தன; மற்ற விசேஷ வழிபாடு எதுவும் நடக்கவில்லை.