கோவில் கைங்கர்ய பணியாளர்களுக்கு உதவித்தொகை வழங்க வலியுறுத்தல்
ADDED :2014 days ago
சென்னை:கோவில் கைங்கர்ய பணிகளில் ஈடுபடுவோருக்கு, மாதம், 5,000 ரூபாய் உதவித்தொகை வழங்க வேண்டும் என, கிராம கோவில் பூஜாரிகள் பேரவை வலியுறுத்தியுள்ளது.
எனவே, தெய்வீக கைங்கர்ய பணிகளில் ஈடுபட்டுள்ளோர் குடும்பத்துக்கு, பேரிடர் கால உதவித் தொகையாக, மாதம், 5,000 ரூபாயை தமிழக அரசு வழங்க வேண்டும். இதற்கு அறநிலைய துறை நிதியை பயன்படுத்த வேண்டும். நிலைமை சீராகும் வரை, இந்த உதவித்தொகை வழங்க, முதல்வர், இ.பி.எஸ்., நடவடிக்கை எடுக்க வேண்டும்.மேலும், ஊரடங்கு நேரத்திலும், கோவில்களின் பூஜை பணிகளுக்காக செல்லும் பூஜாரிகள் மீது தாக்குதல் நடத்தப்படும் காட்சிகள், வருத்தம் அளிக்கிறது. மாவட்ட நிர்வாகம் சார்பில், அவர்களுக்கு அடையாள அட்டை வழங்க வேண்டும்.இவ்வாறு, அவர்கள் தெரிவித்துள்ளனர்.