கிருபாபுரீஸ்வரர் கோவிலில் யாகசாலை சிறப்பு பூஜை
ADDED :2112 days ago
திருவெண்ணெய்நல்லுார்: கொரோனா நோய் தடுக்க பொதுமக்கள் நலனுக்காக இந்து அறநிலையத்துறை சார்பில் திருவெண்ணெய்நல்லுார் கிருபாபுரீஸ்வரர் கோவிலில் ேஹாமம் நடத்தப்பட்டது.
நாடு முழுவதும் கொரோனா பீதி நாளுக்கு நாள் அச்சுறுத்தி வரும் நிலையில், திருவெண்ணெய்நல்லுாரில் 1600 ஆண்டுகள் பழைமை வாய்ந்த, மங்காளம்பிகை சமேத கிருபாபுரீஸ்வரர் கோவிலில் நேற்று காலை சிறப்பு ேஹாமம் நடத்தப்பட்டது.இதில் 24 வகையான காய்ச்சலைக் போக்கவும், எதிரிகள் தொல்லைகள் நீங்கவும், மக்கள் நலமுடன் வாழவும், 2 கலசங்கள் வைத்து, அபிேஷகம் நடத்தினர், பின்னர் 4 பேர் கொண்ட அர்த்தனாரி குருக்கள் மந்திரங்கள் சொல்லி யாக சாலை பூஜை நடத்தினர். ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை செயல் அலுவலர் ஸ்ரீகன்யா செய்திருந்தார்.