பலன் தரும் பாட்டு
ADDED :2022 days ago
கம்பராமாயணத்திலுள்ள
“நன்மையும் செல்வமும் நாளும் நல்குமே
தின்மையும் பாவமும் சிதைந்து தேயுமே
சென்மமும் மரணமும் இன்றித் தீருமே
இம்மையே இராமவென் றிரண்டெழுத்தினால்” என்ற பாடலை ஸ்ரீராமநவமியன்று பாடுவது பலனளிக்கும். ராமனின் பெயரைச் சொன்னால், நன்மையும், செல்வமும் சேரும். தீமையும், பாவமும் அழியும். பிறவி, மரணம் நீங்கி பிறவிச் சக்கரத்தில் இருந்து விடுபடலாம் என்பது இதன் பொருள்.