உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மதுரையில் சித்திரை திருவிழா கோலாகலம்: பக்தி பரவசத்தில் பக்தர்கள்!

மதுரையில் சித்திரை திருவிழா கோலாகலம்: பக்தி பரவசத்தில் பக்தர்கள்!

மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோயில் சித்திரை திருவிழா கடந்த 23ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான அழகர் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்வு நாளை (மே.6ல்) நடைபெறுகிறது.

காலை 5.45க்கு மேல் 6.15 மணிக்குள் அழகர் வைகை ஆற்றில் இறங்குகிறார். காலை 7.30 மணிக்கு அங்கிருந்து புறப்படும் அழகர், காலை 10 மணிக்கு ராமராயர் மண்டபம் செல்கிறார். பக்தர்கள் தண்ணீர் பீய்ச்சியும், அங்க பிரதட்சணம் செய்தும் நேர்த்திக் கடன் செலுத்துவர். மாலை 5 மணிக்கு அங்கிருந்து புறப்பட்டு, இரவு 11 மணிக்கு வண்டியூர் வீரராகவப் பெருமாள் கோயில் சென்றடைகிறார். விழாவில் லட்சகணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்வார்கள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !