தான்தோன்றீஸ்வரர் கோவிலில் கொடிமரத்துக்கு எண்ணெய் பூச்சு
ADDED :2006 days ago
வாழப்பாடி: வாழப்பாடி அருகே, பேளூர் தான்தோன்றீஸ்வரர் கோவில் வளாகத்தில் வைக்கப்பட்டிருந்த கொடிமரம் பட்டுப்போனதால் அகற்றப் பட்டது. அதற்கு பதிலாக, புது கொடிமரம் செய்ய, கேரளா மாநிலம், பந்தினம் திட்டாவிலிருந்து, வேங்கை மரம் கொண்டு வரப்பட்டது. 31 அடி உயர மரத்துக்கு கடந்த, 19ல், பூஜை செய்து, சேலம், கோரிமேடு ஸ்தபதி மணிகண்டன் தலைமையில் பணியாளர்கள், நேர்த்தியாக வடிவமைத்தனர். இந்நிலையில், மரம் நீண்ட நாள் பாதிப்பில்லாமல் இருக்க, தொடர்ந்து, 48 நாள், வேப்பெண்ணெய், நல்லெண்ணெய் பூசப்படும். தற்போது, ஊரடங்கால், கோவில் நடை சாத்தப்பட்டதால், கொடிமரத்துக்கு தினமும் குறைந்தளவு எண்ணெய் மட்டும் பூசப்பட்டு வருகிறது.