வாசலில் வேப்பிலை கலசம் தொடரும் வினோத வழிபாடு
ADDED :2116 days ago
விருத்தாசலம்: கொரோனாவை விரட்ட, விருத்தாசலத்தில் வீட்டு வாசலில் வேப்பிலை கலசம் வைத்து பொது மக்கள் வழிபட்டனர்.
கொரோனா பரவலை கட் டுப்படுத்தும் விதமாக சமூக இடைவெளியை வலியுறுத்தி பொது மக்கள் கூடுவதை தவிர்க்கும் வகையில், வழிபாட்டு தலங்கள், வணிக நிறுவனங்கள்
அனைத்தும் மூடப் பட்டன. இதனால் வீட்டிற்குள் முடங்கிக்கிடக்கும் மக்கள், அவரவர் நம்பிக்கைக்கு ஏற்ப, சுவாமியிடம் கோரிக்கை வைத்து, வேண்டுதல்களை நிறைவேற்றி வருகின்றனர். அதன்படி, விருத்தாசலத்தில் கொரோனாவை விரட்ட வேண்டி, தங்கள் வீட்டு வாசலில் வேப்பிலை கலசம் வைத்து வேண்டினர். வெளியிலிருக்கும் கொரோனா தொற்று வீட்டிற்குள் நுழையக்கூடாது என எண்ணி, மஞ்சள் நீர் நிரப்பிய கலசத்தில், வேப்பிலை கொத்துவைத்து, வேண்டினர்.