வீடுகளில் ராம நவமி வழிபாடு
ADDED :2116 days ago
சூலூர்: தமிழ்நாடு விஸ்வ இந்து பரிஷத் சார்பில், வீடுகள் தோறும் ராம நாம ஜபம் நடந்தது. வி.இ.ப., தமிழ்நாடு, சார்பில், ராம நவமியை முன்னிட்டு, ராம நாம ஜபம் நடந்தது. சூலூர், பாரதிபுரம், இருகூர், பட்டணம், நடுப்பாளையம் நெசவாளர் காலனி பகுதியில் உள்ள வீடுகளில், நாட்டில் ஒற்றுமை நிலவவும், உலகில் கொரோனா வைரஸ் ஒழியவும், 108 முறை ராம நாமம் ஜபிக்கப்பட்டது. மண்டல தலைவர் வக்கீல் விஜயகுமார், நாகராஜ், கிருஷ்ணகுமார், கோவிந்தராஜ், இந்திராணி உள்ளிட்ட நிர்வாகிகளின் வீடுகளில் ஜபம் நடந்தது.