மதுரை மீனாட்சி அம்மன் கோயில் துாய்மை பணியால் பளீச்
ADDED :2054 days ago
மதுரை :மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் தினமும் நடக்கும் துாய்மை பணியால் பளீச் ஆக உள்ளது.கொரோனா தடுப்பு ஊரடங்கு உத்தரவு ஏப்.,14 வரை அமலில் உள்ளது. சமூக விலகலை பின்பற்றும் வகையில் கோயில்கள் அடைக்கப்பட்டுள்ளன. மீனாட்சி அம்மன் கோயில் உட்பட 20 துணை கோயில்களில் துாய்மைப்பணி நடக்கிறது. இதற்கான பணியில் 120 பேர் ஈடுபட்டுள்ளனர். தனியார் காவலர்கள் மூன்று ஷிப்ட் முறையில் பணிபுரிகின்றனர். கோயிலில் வழக்கம் போல் நித்ய கால பூஜை, துாய்மைப்பணி, மின் சாதனங்கள் பழுது நீக்குதல் உள்ளிட்டவை நடக்கின்றன. கோயிலை தினமும் துாய்மைப்படுத்துவதால் கோயில் பளீச் என மாறியுள்ளது.