வீரட்டானேஸ்வரர் கோவிலில் முருகப்பெருமானுக்கு சிறப்பு வழிபாடு
ADDED :2024 days ago
திருக்கோவிலூர்: திருக்கோவிலூர், கீழையூர், வீரட்டானேஸ்வரர் கோவிலில் பங்குனி உத்திரத்தை முன்னிட்டு முருகப்பெருமானுக்கு சிறப்பு வழிபாடு நடந்தது.
பங்குனி உத்திரத்தை முன்னிட்டு திருக்கோவிலூர், கீழையூர், வீரட்டானேஸ்வரர் கோவில், சண்முகப் பெருமான் ஆலயத்தில் சிறப்பு வழிபாடு நடந்தது. காலை 9:00 மணிக்கு அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜை, புண்ணியாகவாசனம், கலச ஸ்தாபனம், பஞ்சாசன பூஜை, பஞ்சாவரன பூஜை, சோமாஸ்கந்தர், வள்ளி தேவசேனா சண்முகப் பெருமானுக்கு விசேஷ அபிஷேகம், அலங்காரம், சோடசோபவுப்சார தீபாராதனை நடந்தது.இந்து சமய அறநிலைத்துறை மற்றும் பக்தர்கள் ஏற்பாட்டில் நடந்த இந்நிகழ்ச்சியில் சிவாச்சாரியர்கள் மட்டுமே பங்கேற்றனர். பக்தர்கள் யாரும் அனுமதிக்கப்படவில்லை.