தங்கத்தேர் புறப்பாடு திருமலையில் ரத்து
ADDED :2003 days ago
திருப்பதி : திருமலையில் ஆண்டுதோறும் ஏப்ரல் மாதம், கோடை வெயிலின் தாக்கத்திலிருந்து விடுபட, உற்சவ மூர்த்திகளுக்கு, வருடாந்திர வசந்தோற்சவத்தை தேவஸ்தானம் நடத்தி வருகிறது.இதன்படி, ஞாயிற்றுக் கிழமை முதல், திருமலையில் வருடாந்திர வசந்தோற்சவம் நடந்து வருகிறது. அதன் இரண்டாம் நாள் காலை, தங்கத்தேரில் உற்சவ மூர்த்திகள் மாட வீதியில் எழுந்தருள்வது வழக்கம்.கொரோனா தொற்று காரணமாக உற்சவ மூர்த்திகள், தற்போது மாடவீதியில் எழுந்தருள செய்யப்படுவதில்லை. கோவிலுக்குள்ளே புறப்பாடு கண்டருளி வருகின்றனர். எனவே, வசந்தோற்சவத்தின், இரண்டாம் நாள் நடக்கும் தங்கத்தேர் புறப்பாட்டை தேவஸ்தானம் ரத்து செய்துள்ளது.