உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / உடுமலையில் பங்குனி உத்திர சிறப்பு பூஜை

உடுமலையில் பங்குனி உத்திர சிறப்பு பூஜை

உடுமலை: பங்குனி மாதம் வரும் உத்திர நட்சத்திரம், முருகனுக்கு விசேஷமாக கொண்டாடப்படுவதால், கோவில்களில் சிறப்பு பூஜை நடக்கிறது. ‘கொரோனா’ வைரஸ் பாதிப்பு தடுப்பு நடவடிக்கையாக கோவில்களும் தற்போது மூடப்பட்டுள்ளன. இதனால், சுவாமிகளுக்கு அர்ச்சகர்கள் மட்டுமே சென்று பூஜை செய்து வருகின்றனர். நேற்று, பங்குனி உத்திர நாளையொட்டி, பிரசன்ன விநாயகர் கோவிலில் உள்ள வள்ளி தெய்வானை சமேத சுப்ரமணிய சுவாமிக்கு, அபிேஷக அலங்கார பூஜை நடந்தது. பால், பன்னீர், மஞ்சள் உட்பட 16 வகையான திரவியங்களில் சுவாமிகளுக்கு அபிேஷகம் நடந்தது. சிறப்பு அலங்காரத்துடன், சுப்ரமணிய சுவாமிக்கு தீபாராதனை நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !