உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சூளாங்குறிச்சி சுப்ரமணிய சுவாமி கோவிலில் சிறப்பு அலங்காரம்

சூளாங்குறிச்சி சுப்ரமணிய சுவாமி கோவிலில் சிறப்பு அலங்காரம்

ரிஷிவந்தியம்: சூளாங்குறிச்சி சுப்ரமணிய சுவாமி கோவிலில் சிறப்பு அபிேஷகம் மற்றும் அலங்காரம் செய்யப்பட்டது.

ரிஷிவந்தியம் அடுத்த சூளாங்குறிச்சி கிராமத்தில் உள்ள வள்ளி தேவசேனா சமேத சுப்ரமணியர் சுவாமி கோவிலில் பங்குனி உத்திரத்தையொட்டி கடந்த மார்ச் 28ம் தேதி காப்பு கட்டுதல் நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து காலையில் சுவாமிக்கு சிறப்பு அபிேஷகம் நடந்தது. பங்குனி உத்திரத்தையொட்டி நேற்று மூலவருக்கு பால், சந்தனம், விபூதி உள்ளிட்ட திரவியங்கள் கொண்டு அபிேஷகம் செய்யப்பட்டு, வெள்ளி கவசத்தால் அலங்காரம் செய்யப்பட்டது.தற்போது ஊரடங்கு உத்தரவு அமலில் இருப்பதால் அலகு குத்துதல், தேர் இழுத்தல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !