உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கூவாகம் கூத்தாண்டவர் திருவிழா ரத்து

கூவாகம் கூத்தாண்டவர் திருவிழா ரத்து

உளூந்தூர்ப்டே்டை: கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக, சித்திரை மாதம் நடக்க உள்ள கூவாகம் கூத்தாண்டவர் கோயில் திருவிழா ரத்து செய்யப்படுவதாக மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. உளூந்தூர்பேட்டை அருகேயுள்ள கூவாகம் கிராமத்தில், கூத்தாண்டவர் கோயிலில் ஆண்டுதோறும் சித்திரை மாதம், 16 நாட்கள் திருவிழா நடக்கும். இதற்காக, டில்லி, மும்பை , கோல்கட்டா, பெங்களூரு உள்ளிட்ட வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்தும் திருநங்கைகள் கூடுவார்கள்.

இந்நிலையில், கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஏப்., 14 வரை ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. நாடு முழுவதும் உள்ள கோயில்கள், மசூதிகள், தேவாலயங்கள் மூடப்பட்டுள்ளன. இதனால், வரும் 21ல் இருந்து மே 6 வரை நடைபெற இருந்த கூத்தாண்டவர் திருவிழா ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான முடிவு, போலீஸ் அதிகாரிகள் தலைமையில் நடந்த கூட்டத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !