பக்தர்களின்றி நடந்த அருணாசலேஸ்வரர் திருக்கல்யாணம்
ADDED :2053 days ago
திருவண்ணாமலை: ஊரடங்கு உத்தரவால், திருவண்ணாமலை, அருணாசலேஸ்வரர் கோவிலில், அருணாச்சலேஸ்வரர் திருக்கல்யாணம் பக்தர்களின்றி நேற்று நடந்தது. திருவண்ணாமலை, அருணாசலேஸ்வரர் கோவிலில், பங்குனி உத்திர திருக்கல்யாண விழா, நேற்று நடந்தது. இதையொட்டி, அருணாசலேஸ்வரர், உண்ணாமுலையம்மன், மூலவர் மற்றும் உற்சவ மூர்த்திக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் சிறப்பு பூஜை நடந்தது. தொடர்ந்து, மூலவர் அருணாசலேஸ்வரர், உண்ணாமுலையம்மனுக்கு தாலி கட்டும் திருக்கல்யாண நிகழ்ச்சி நடந்தது. இதைத்தொடர்ந்து இரவு, 8:00 மணிக்கு பெரியநாயகர், அம்மன், தங்க கொடிமரம் முன்பு எழுந்தருளி, மாலை மாற்றும் நிகழ்ச்சி நடந்தது. பின், திருக்கல்யாண மண்டபத்தில் எழுந்தருளிய சுவாமிக்கு திருக்கல்யாண உற்சவம் நடத்தப்பட்டது.