உலக நன்மை வேண்டி மாரியூரில் ருத்ர ஹோமம்
ADDED :2061 days ago
சாயல்குடி:சாயல்குடி அருகே மாரியூர் பூவேந்திய நாதர் சமேத பவள நிற வல்லியம்மன் கோயிலில் கொரோனா பாதிப்பில் இருந்து விலகவும், உலக நன்மைக்கான ருத்ர ஹோமம் நடந்தது.
மூலவர்களுக்கு பால், பன்னீர், இளநீர், தயிர் உள்ளிட்ட 11 வகையான அபிஷேக ஆராதனைகள் நிறைவேற்றப்பட்டது. கோயில் சன்னதி முன்பு ஹோமம் வளர்க்கப்பட்டு, மூலிகைப் பொருட்கள், வஸ்திரம், பழங்கள், நெய் உள்ளிட்டவைகள் பூர்ணாகுதி செய்யப்பட்டு சிறப்பு தீபாராதனை நடந்தது. சிவசகஸ்ரநாம அர்ச்சனை, ஸ்தோத்திரம், நாமாவளி, பாராயணம்ஆகியவற்றை கோயில் குருக்கள் சேகர், சந்தோஷ் செய்தனர்.ஏற்பாடுகளை மகாசபை பிரதோஷ அன்னதான கமிட்டியினர்செய்திருந்தனர். பக்தர்கள் யாரும் ஹோம வேள்வியில் பங்கேற்கவில்லை.