சங்கராபுரம் கோவில்களில் பங்குனி உத்திர அபிஷேகம்
ADDED :2008 days ago
சங்கராபுரம்: சங்கராபுரம் பகுதி முருகன் கோவில்களில் பங்குனி உத்திரத்தை முன்னிட்டு சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது.கொரோனா காரணமாக கோவில்களில் பங்குனி உத்திர திருவிழா நடந்த போலீசார் தடை விதித்தனர்.இதையொட்டி சங்கராபுரம் பூட்டை ரோடில் உள்ள முருகன் கோவில், காட்டு வனஞ்சூர், ராவுத்தநல்லுார் சக்திமலை முருகன் கோவில், எஸ்.குளத்துார் முருகன் கோவில்களில் பங்குனி உத்திரத்தை முன்னிட்டு முருகன், வள்ளி, தெய்வானை சுவாமிக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை நடந்தது. ஊரடங்கு உத்தரவால் ஒரு சிலர் மட்டுமே பங்கேற்றனர்.