சென்னை : கோவில் அர்ச்சகர்கள், பட்டாச்சாரியார்கள், பூசாரிகளுக்கு, 1,000 ரூபாய் உதவித்தொகை வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.ஊரடங்கால், கோவில்களில் பக்தர்கள் தரிசனம் தடை விதிக்கப்பட்டுள்ளது. கோவில்களில், மாதச் சம்பளம் இல்லாமல், தட்சணை பெற்று பணியாற்றும் அர்ச்சகர்கள், பட்டாச்சாரியார்கள், பூசாரிகள், கடுமையாக பாதிப்பட்டுள்ளனர். அவர்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு, அவர்கள் பணியாற்றும் கோவில் நிதியில் இருந்தோ அல்லது முதன்மை கோவில் நிதியில் இருந்தோ, மார்ச், 15 முதல், வரும், 15ம் தேதி வரை உள்ள காலத்திற்கு, உதவிக் தொகையாக, தலா, 1,000 ரூபாய் வழங்கப்படும். இத்தகவலை அறநிலையத் துறை அமைச்சர், ராமச்சந்திரன் தெரிவித்தார்.