நரசிம்மரின் கோலங்கள்!
ADDED :2117 days ago
கடலூர், சிங்கிரி ஸ்ரீநரசிம்மத் திருக்கோயிலின் கருவறையில் மூன்று நரசிம்மர்களை ஒருசேர தரிசிக்கலாம். இரண்யனை வதம் செய்த சம்ஹார நரசிம்மர், யோக நரசிம்மர், பால நரசிம்மர் என மூவரும் அருள்புரிகிறார்கள். இவர்களை ஒருசேர தரிசிக்க எதிரிகள் அழிவர். செல்வ வளம் பெருகும். கல்வியில் சிறந்து விளங்கலாம். மேலும் சிங்கிரி கோயில், பூவரசங்குப்பம், பரிக்கல் ஆகிய மூன்று திருத்தலங்களிலும் அருள்புரியும் நரசிம்மர்களை ஒரே நாளில் வழிபட்டால் துன்பங்கள் விலகி, மகிழ்ச்சியும் நன்மைகளும் பெருகும் என்பது ஐதீகம்.