ராமாயணத்தை மேற்கோள்காட்டி பிரதமர் மோடியிடம் உதவி கேட்ட பிரேசில் அதிபர்
ADDED :2051 days ago
புதுடில்லி: அனுமன் சஞ்சீவி மூலிகையை கொண்டுவந்து லக்ஷ்மன் உயிரை காப்பாற்றியது போல இந்தியா ஹைட்ராக்சி குளோரோகுயின் மருந்தை வழங்கி பிரேசில் மக்களை காக்க வேண்டும் என பிரேசில் அதிபர் ஜெயிர் போல்செனாரோ பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.
பிரதமர் மோடிக்கு, ஜெயிர் போரல்செனரோ எழுதியுள்ள கடிதத்தில் கூறியுள்ளதாவது: கடவுள் ராமரின், சகோதரரான லட்சுமணரை காப்பாற்ற, கடவுள் அனுமன், இமயமலையில் இருந்து புனித மருந்தை எடுத்து வந்தார். அதேபோல, இயேசு, நோயுள்ளவர்களை, தன் ஆற்றலால் குணப்படுத்தினார். தற்போது கொரோனாவால், ஏற்பட்டிருக்கும் உலகளாவிய பிரச்னையை, இந்தியாவும், பிரேசிலும் இணைந்து எதிர்கொண்டு வெற்றி பெறும் எனக்கூறியுள்ள அவர், ஹைட்ராக்ஹிகுளோரோகுயின் மருந்தை பிரேசிலுக்கு, இந்தியா ஏற்றுமதி செய்ய வேண்டும் எனக்கூறியுள்ளார்.