ஈஸ்டர்: வீடுகளில் பிரார்த்தனை
ADDED :2005 days ago
திருமங்கலம் :ஈஸ்டர் பண்டிகை, புனித வெள்ளி போன்றவற்றின் போது சர்ச்களில் கூட்டம் கூட வேண்டாம். வீடுகளில் இருந்து பிரார்த்தனை செய்ய வேண்டும், என, மாநில சிறுபான்மை ஆணைய தலைவர் ஜான் மகேந்திரன் தெரிவித்துள்ளார்.அவர் தெரிவித்துள்ளதாவது: கொரோனா பரவாமல் இருக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. தற்போது கிறிஸ்தவர்களின் தவக்காலம் நடக்கிறது. தொடர்ச்சியாக ஈஸ்டர், புனித வெள்ளி போன்றவை நடக்கவுள்ளன. இந்த நிகழ்ச்சிகளின் போது சர்ச்களில் கூட்டமாக சேர்ந்து பிரார்த்தனை செய்யாமல் அவரவர் வீடுகளில் இருந்து பிரார்தனை செய்து, அரசுகளுக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.