சன்மார்க்க சத்திய சேவா சங்கத்தில் பிரார்த்தனை
ADDED :2051 days ago
மதுரை:மதுரை அனுப்பானடி சன்மார்க்க சத்திய சேவா சங்கத்தில் திருஅருட்பிரகாச வள்ளலார் தலைமையில் தேச நன்மைக்காக பிரார்த்தனை சேவை நடந்தது. சிவ விஷ்ணு கவசங்கள், திருஞானசம்பந்தர் அருளிய கோளாறு பதிகம், திருநீற்றுபதிகம் வள்ளலார் அருளிய சிகாமணி மாலை, அகவல் மற்றும் சிறுமை விளையாட்டு பதிகங்கள் பாராயணம் செய்யப்பட்டது. பிரார்த்தனையை சன்மார்க்க சேவகர் ராமநாதன் நடத்தினார்.