நாராயணி பீடம் சார்பில் போலீசாருக்கு முக கவசம்
ADDED :2006 days ago
வேலூர்: வேலூர் நாராயணி பீடம் சார்பில், போலீசாருக்கு மூன்று லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் முக கவசங்கள் வழங்கப்பட்டன. கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கைகளில், வேலூர் மாவட்ட போலீசார் ஈடுபட்டுள்ளனர். அவர்களுக்கு வினியோகிக்க, வேலூர் நாராயணி பீடம் சார்பில், மூன்று லட்சம் ரூபாய் மதிப்பிலான, எண்- 95 ரகத்தை சேர்ந்த, 1,000 முக கவசங்கள் நேற்று வழங்கப்பட்டன. இவற்றை நாராயணி மருத்துவமனை ஆராய்ச்சி மைய இயக்குனர் பாலாஜி, வேலூர் உட்கோட்ட டி.எஸ்.பி., பாலகிருஷ்ணனிடம் வழங்கினார். அப்போது, தங்கக்கோவில் மேலாளர் சம்பத் உடனிருந்தார்.