உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கோவில் அர்ச்சகர்களுக்கு மளிகை பொருட்கள் வழங்கல்

கோவில் அர்ச்சகர்களுக்கு மளிகை பொருட்கள் வழங்கல்

புதுச்சேரி: புதுச்சேரி தர்ம சம்ரக்ஷணா சமிதி அமைப்பு மூலம் கோவில் அர்ச்சகர்களுக்கு மளிகை பொருட்கள் வழங்கப்பட்டன.

புதுச்சேரி தர்ம சம்ரக்ஷணா சமிதி அமைப்பு மூலம் கடந்த 15 நாட்களாக ராஜிவ்காந்தி மருத்துவமனைக்கு வருபவர்களுக்கு ஊரடங்கு காரணமாக தினமும் மதிய உணவு வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், கொரோனா தொற்றை தவிர்க்க கோவில்கள் மூடப்பட்டுள்ளதால், எந்தவொரு வருமானமும் இன்றி சிரமத்திற்குள்ளாகி வரும் கோவில் அர்ச்சகர்களுக்கு குறைந்த பட்ச வாழ்வாதாரத்தை உறுதி செய்யும் விதமாக ஒரு மாதத்திற்கான மளிகை பொருட்கள் வழங்கப்பட்டன. இதில், அமைப்பு தலைவர் டாக்டர் ஸ்ரீனிவாசன், செயலர் சீத்தாராமன், ரவி, கீதா ராம குருக்கள், அருணாசலம், கார்த்திகேயன், சங்கரன், ரகோத்தமன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.மேலும், இந்த அமைப்பு மூலம் இந்து மத போதனைகளை மக்களுக்கு எடுத்துக் கூறும் விதமாக பல்வேறு மக்கள் நலப்பணிகளை மேற்கொள்ள முடிவு செய்யப் பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !