விநாயகர் கோவில் உண்டியல் உடைப்பு
ADDED :2361 days ago
பாகூர்; தவளக்குப்பம் அடுத்த அபிஷேகப்பாக்கம் பஸ் நிறுத்தம் அருகே உள்ள விநாயகர் கோவிலின் காணிக்கை உண்டியல் கடந்த 6ம் தேதி காலை உடைந்து கிடந்தது. தவளக்குப்பம் போலீசார்,சம்பவ இடத்தை பார்வையிட்டு, அப்பகுதியில் உள்ள சி.சி.டி.வி., பதிவைஆய்வு செய்தனர். அதில், முகத்தை துணியால் மூடிய மர்ம நபர், உண்டியலை உடைத்து பணத்தை திருடிச் சென்றது தெரியவந்தது.மர்ம நபரை போலீசார் தேடிவருகின்றனர்.