நலங்கு அலங்காரத்தில் அருள்பாலித்த அருணாசலேஸ்வரர்
ADDED :2107 days ago
திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், பங்குனி உத்திரத்தில் திருக்கல்யாணம் நடைபெற்றது. விழா முடிந்து முதல் நாள் இரவு நலங்கு அலங்காரத்தில், உண்ணாமுலையம்மன் சமேதரராய் அண்ணாமலையார் அருள்பாலித்தார். கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையால், கோயில் பக்தர்கள் இன்றி வெறிச்சோடியுள்ளது. கிரிவலப்பாதையை பக்தர்கள் யாரும் செல்லாமல் இருக்க போலீசார் பேரிகார்டுகள் மூலம் சாலை அடைத்துள்ளனர்.