மக்களை மாற்றிய கொரோனா: நிலாச்சோறு, வேப்பிலையில் குளியல், மிளகு ரசம்
ADDED :2016 days ago
நாகர்கோவில் : நிலா சோறு சாப்பிடுவது மஞ்சள் வேப்பிலையில் குளியல் பூண்டு மிளகில் சமையல் என கொரோனா மக்களை பாட்டி காலத்துக்கு மாற்றியுள்ளது.
கொரோனாவால் சில நல்ல விஷயங்களும் நடக்க துவங்கியுள்ளது. அந்தக்காலத்தில் வெளியில் சென்றுவிட்டு வீடு திரும்பும் போது வாசலில் தண்ணீரில் கை கால் கழுவி துடைத்த பின்னரே உள்ளே நுழைவர். காலம் மாறி அதெல்லாம் மறக்கப்பட்டது. காலணியுடன் படுக்கையறை வரை சென்றனர். சரியாக கை கழுவுவது கூட இல்லை. கொரோனா இன்று பழைய காலத்தை மீண்டும் கொண்டு வந்துள்ளது. வீட்டுவாசலில் வேப்பிலை மஞ்சள் கலந்த தண்ணீர் வைக்கப்பட்டு கை கால் கழுவுவது ஒரு கடமையாகியுள்ளது.
ஊரடங்கு: மொட்டை மாடியில் நிலாச்சோறு சாப்பிடும் வாய்ப்பை அளித்துள்ளது.