அருணாசலேஸ்வரர் கருவறை மீது சூரிய ஒளி அபூர்வ நிகழ்வு
ADDED :2073 days ago
திருவண்ணாமலை: திருவண்ணாமலை, கிரிவலப்பாதையில் உள்ள திருநேர் அருணாசலேஸ்வரர் கோவில் கருவறையில், சூரிய ஒளி விழும் அபூர்வ நிகழ்வு நேற்று நடந்தது. திருவண்ணாமலை, அருணாசலேஸ்வரர் கோவிலின் நேர் பின்புறம் கிரிவலப்பாதையில், திருநேர் அருணாசலேஸ்வரர் கோவில் உள்ளது. இங்கு, ஆண்டுதோறும் சித்திரை மாத பிறப்பின் முதல் நாளன்று, அருணாசலேஸ்வரர் லிங்கம் மூலவர் மீது, சூரிய ஒளி விழும் அபூர்வ நிகழ்வு நடப்பது வழக்கம். சார்வரி தமிழ் வருட பிறப்பான நேற்று, சூரிய உதயத்தின் போது, இந்த அபூர்வ நிகழ்வு நடந்தது. இதையொட்டி, அருணாசலேஸ்வரர் லிங்கத்துக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜை நடந்தது. இதில், அப்பகுதியை சேர்ந்த பக்தர்கள் வழிபட்டனர்.