பத்ரிநாத், கேதார்நாத் கோவில்களை திறக்க முடிவு
ADDED :2003 days ago
டேராடூன்: உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள பத்ரிநாத் மற்றும் கேதார்நாத் கோவில்களை, இம்மாத இறுதியில் திறக்க மாநில அரசு முடிவு செய்துள்ளது.
இந்த கோவில்களின் தலைமை பூசாரிகள், கொரோனா ஊரடங்கினால், கர்நாடகா மற்றும் கேரளாவில் சிக்கியுள்ளனர். அவர்களை சாலை மார்க்கமாக கோவிலுக்கு அழைத்துவர அனுமதிக்கும்படி, உள்துறை அமைச்சகத்திற்கு, தலைமை செயலர், உத்பால் குமார் சிங் கடிதம் எழுதியுள்ளார். அவர்களை அழைத்துவர முடியாத நிலையில், வேறு பூசாரிகள் மூலம் வழிபாடு நடத்தும்படி அரசு கூறியுள்ளது.