உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சித்திரை மாத பூஜை நிறைவு: சபரிமலை நடை அடைப்பு

சித்திரை மாத பூஜை நிறைவு: சபரிமலை நடை அடைப்பு

சபரிமலை : சித்திரை மாத பூஜைகள் நிறைவுபெற்று நேற்று இரவு சபரிமலை நடை அடைக்கப்பட்டது.

கொரோனா பரவலால் சபரிமலையில் சித்திரை மாத பூஜைக்கு பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. கடந்த 13ம் தேதி மாலை 5.00 மணிக்கு நடை திறக்கப்பட்டது. அன்று பூஜைகள் இல்லை. இரவு 7.30 மணிக்கு நடை அடைக்கப்பட்டது.14ம் தேதி அதிகாலை 5.00 மணிக்கு நடை திறந்த பின்னர் விஷூ கனி தரிசனம், தொடர்ந்து கணபதி ேஹாமம் உள்ளிட்ட வழக்கமான பூஜைகள் நடைபெற்றது. வழக்கத்தை விட நடை திறக்கும் நேரம் பாதியாக குறைக்கப்பட்டது. அதன்பிறகு தினமும் காலை 5.00 முதல் 10.00, மாலை 5.00 முதல் இரவு 7.30 வரை பூஜைக்காக நடை திறந்திருந்தது.எல்லா நாட்களிலும் கணபதிேஹாமம், உஷபூஜை, உச்சபூஜை, தீபாராதனை, அத்தாழபூஜை நடைபெற்றது. 17ம் தேதி உச்சபூஜைக்கு முன்னோடியாக 25 கலச பூஜை நடைபெற்றது.நேற்றுடன் ஐந்து நாட்கள் பூஜை நிறைவு பெற்றதை தொடர்ந்து நேற்று இரவு 7.30 மணிக்கு நடை அடைக்கப்பட்டது. இனி வைகாசி மாத பூஜைக்காக மே 14ம் தேதி மாலை 5.00 மணிக்கு நடை திறக்கப்படும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !